சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. இப்படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வர இருக்கிறது. அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பேட்ட பொங்கல் கலைகட்டியுள்ளது.
ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரைலரை அணுவணுவாக ரசித்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.
அத்தோடு சூப்பர் ஸ்டாரின் பழைய ஸ்டைலை திரைக்கு கொண்டுவந்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பேட்ட படத்தை பார்த்த பின் தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் தலைவர் அதிரடி இப்படத்தில் உள்ளது. சூப்பர் ஸ்டார் இஸ் பேக், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படம் முழுக்க ஸ்பெஷல் தான் என்று கூறியுள்ளனர்.
மேலும் காமெடி மற்றும் சண்டைக்காட்சிகள் நன்றாக உள்ளது, கார்த்தி சுப்புராஜின் தாக்கமும் படத்தில் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இந்த கருத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
No comments:
Post a Comment