நடிகரும், இயக்குனருமான மனோபாலாவின் மகன் ஹரிஷ்க்கும், பிரியா என்பவருடன் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலையில் லீ மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், கவுண்டமணி, சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன், இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹச்.வினோத் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.