திரையரங்குகளில் கூடுதல் விலையில் உணவுப் பொருள்களை விற்பதாகவும், வெளியிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்கிற்கு செல்லும் மக்கள் உணவு, குடிநீர் உட்பட எந்த ஒரு பொருள்களையும் எடுத்துக் செல்ல அனுமதி இல்லை. என்பது மனித உரிமையை மீறும் செயல். மேலும் திரையரங்குகளில் உள்ள உணவகங்களில் உணவு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகள் என்பது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதால் இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Post Top Ad
Your Ad Spot
Feb 12, 2019
திரையரங்குகளில் வெளி உணவுகளை எடுத்துச் செல்லலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி
Post Top Ad
Your Ad Spot