சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தில்லுக்கு துட்டு 2. இது 2006 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் பார்ட் 2 என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்சி சமீபத்தில் நடைப்பெற்றது அதில் கலந்து கொண்ட சந்தானத்திடன் ஆர்யாவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தானம் அப்படியா? ஆர்யாவுக்கு கல்யாணம் கன்பார்ம் ஆகிடுச்சா? ஒவ்வொரு முறையும் இப்படி தான் சொல்றாங்க. எதுக்கும் அவன் கிட்ட பேசிட்டு அது பற்றி சொல்றேன் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி எனக்கு இயக்குனராக ஆசை இருக்கிறது. அப்படி இயக்குனர் ஆனால் ஆர்யாவை ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment