சர்கார் படத்திற்க்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு தமிழில் பெரிதாய் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது கைவசம் ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தை மட்டுமே வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பிரபல இயக்குனர் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
யாவரும் நலம், 24 போன்ற படங்களை இயக்கிய விக்ரம் கே குமார் இயக்கும் புதிய படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இவருடன் இணைந்து ப்ரியா பிரகாஷ் வாரியரும் நடிக்க இருக்கிறார்.
மகாநடி வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கில் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அங்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment