Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

விஸ்வாசம் இத்தனை தியேட்டர்களில் ஓடுகிறதா! செம மாஸ்

 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான படம் விஸ்வாசம். 

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், அனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார்.

விஸ்வாசம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த நிலையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆன போதிலும் தமிழ்நாட்டில் மட்டுமே விஸ்வாசம் 276 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடுகிறதாம்.

பல திரையரங்குகளில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை விஸ்வாசம் படத்தையே தொடர்ந்து திரையிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages