Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 14, 2019

உச்ச நடிகர் அந்தஸ்துக்கு வந்த பிறகும் விஜய்யிடம் இன்னும் மாறாத நல்ல விஷயம் இதுதானாம்! பிரபல இயக்குனர் கருத்து

விஜயின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சர்கார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் "தளபதி 63" என அழைக்கப்படுகிறது.


இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் ‌ பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜயை வைத்து "செல்வா" "நிலாவே வா" "பகவதி" போன்ற படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

அதில் விஜய் பற்றி கூறுகையில் "விஜய் இன்று மிகப்பெரிய நடிகராக மாறிவிட்டார். அவருக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. இந்த நிலைக்கு வந்த பின்னரும் தான் முன்பு பணியாற்றிய அனைவரையும் எங்கு பார்த்தாலும் தேடி கண்டுபிடித்து பேசிவிடுவார்" என கூறியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages