Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 14, 2019

பேட்ட படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

சூப்பர் ஸ்டாரின் "பேட்ட" படத்தில் நடித்த சிம்ரன், த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகியோர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன், அட்வெஞ்சர் பாணியில் உருவாகவுள்ள அப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர்.சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

விபத்தில் சிக்கிய 20 வயது இளம் நடிகை! 

இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages