Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2019

மீண்டும் இணையும் பார்த்திபன், வடிவேலு காம்போ!

தமிழ் சினிமாவின் மிகவும் ஃபேமஸான காம்போவான பார்த்திபன், வடிவேலு கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வெற்றிக் கொடி கட்டு, காக்கை சிறகினிலே, பாரதி கண்ணம்மா, காதல் கிருக்கன் போன்ற படங்களில் பார்த்திபன் மற்றும் வடிவேலு இணைந்து செய்யும் காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

பார்த்திபனின் கேட்கும் குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் வடிவேலுவை இன்றைக்கு சின்னத்திரையில் பார்த்து ரசிக்கும் மக்கள் அதிகம்.

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ‌ சுராஜ் இயக்கும் புதிய படத்தில் பார்த்திபனும், வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சினையால் வடிவேலு எந்த படத்திலும் நடிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த பிரச்சினைகள் விரைவில் முடிக்கப்பட்டு. சுராஜ் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages