Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2019

5வது வாரத்திலும் விஸ்வாசத்தின் அசத்தல் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடிகளா?

தல அஜித் - நயன்தாரா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான படம் விஸ்வாசம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் படத்திற்க்கு ஆரம்பத்தில் இருந்தே பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அத்துடன் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் கதைக்களம் இருந்ததால் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வந்தனர். இதனால் விஸ்வாசம் பல ஏரியாக்களில் வசூல் சாதனை படைத்தது.

4 வாரங்களை கடந்து 5வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம். சென்னையில் மட்டுமே ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 20 வயது இளம் நடிகை!

அஜித் நடித்த படங்களிலே இதுவரை அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையையும் விஸ்வாசம் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages