ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ, நித்யஹரித்தா போன்ற மலையாள படங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ சிவதாஸ். கடந்த 10 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தால் இவர் காயம் அடைந்துள்ளதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயஸ்ரீ சிவதாஸ் காரில் ஏறும் போது அதிவேகமாக வந்த ரிக்சா அவர் மீது மோதியதால் சில காயங்கள் ஏற்ப்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்போது ஜெயஸ்ரீ மருத்துவமனையில் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.