Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2019

மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.


இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ள சிம்பு பேங்காக் செல்ல இருக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.


ஜெய் ஏற்கனவே சிம்புவின் வாலு, இது நம்ம ஆளு போன்ற படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages