Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2019

ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா, சஞ்சீவ்வின் கல்யாணம் எப்போ தெரியுமா?

சின்னத்திரை நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமானவர்கள் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் ஆல்யா மானஸா, சஞ்சீவ். இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது நிஜத்திலும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது.


இந்த தகவலை இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து எடுத்துக்கொண்ட சில நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் டப்ஸ்மேஷ் வீடியோக்களையும் வெளியிட்டு உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஆல்யா மானஸாவும், சஞ்சீவும் ஜோடியாக பங்கேற்றனர். மேடையில் பேசிய சஞ்சீவ் தான் ஆலியாவை காதலிப்பதாக கூறினார்.

மேலும் திருமணம் குறித்து கேட்கையில் இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages