Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 12, 2019

பேட்ட வசூலை பற்றி முதன் முறையாக மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.


பொங்கலை முன்னிட்டு வெளியான பேட்ட திரைப்படம், அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் நேரடியாக மோதியது. இதனால் சில சர்ச்சைகளுக்கு எழுந்தன.

இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக பேசியுள்ளார்.

பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் பேட்ட, விஸ்வாசம் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால் பேட்ட நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை ஈட்டியுள்ளது. இதை நான் ரஜினி சாரிடமே தெரிவித்தேன். அவரும் சந்தோஷப்பட்டார். என கூறியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages