Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2019

விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் சிம்பு!

 

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதுமட்டுமின்றி சிம்பு பழைய ஃபிட்னஸ்க்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு  நடிக்க இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ள சிம்பு விரைவில் பேங்காக் செல்ல இருக்கிறாராம். அங்கு சென்று மார்ஷியல் மட்டுமின்றி தன் உடல் எடையும் குறைக்க திட்டமிட்டுள்ளார்.

தன் உடல் எடையை குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கவே சிம்பு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages