சென்னையை சேர்ந்த சிறுவன் தன் இசையால் உலகையே வியக்க வைத்துள்ளார்.
சிறுவர், சிறுமியர் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த பல தொலைக்காட்சிகள் உதவுகிறது. சிறுவர், சிறுமியர் அதில் கலந்து கொண்டு தன் அபார திறமையை வெளிப்படுத்தி உலக அளவில் ஃபேமஸ் ஆகிவிடுகிறார்கள்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் லிடியான் நாதஸ்வரம் என்பவர் வெளிநாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு தன் இசையால் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் நடுவர்களாக பங்கேற்க அந்த நிகழ்ச்சியில் பல்வேறு வேகத்தில் பியானோ வாசித்து அசத்தியுள்ளார். இந்த சிறுவனின் அபார திறமையை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் கார்டென் என்பவர் நான் பார்த்த இசை நிகழ்ச்சிகளிலே இதுதான் சிறந்தது என்று பாராட்டியுள்ளார்.
This is genuinely one of the best things I’ve ever seen live. pic.twitter.com/FY5LH6vxfI— James Corden (@JKCorden) February 8, 2019