ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற "மாணிக்க மலராய பூவி" என்ற பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் தனது ட்ரீம் பாய் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் ஆகியோர் நடிப்பில் உருவான ஒரு அடார் லவ் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது ட்ரீம் பாய் எப்படி இருக்கவேண்டும் என்று பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் துல்கர் சல்மான் போன்ற உடல்வாகுடனும், பகத் பாசில் போன்ற சிரிப்புடனும், டோவினோ தாமஸ் போன்ற முடியும் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் அவரிடம் காதலில் விழுந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.