Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 16, 2019

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ராட்சசன் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகர் இவரா!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார்.


ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தெலுங்கில் விஷ்ணு விஷால் ரோலில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ராட்சசன் திரைப்படம் தனக்கு நற்பெயரை வாங்கி தரும் என்பதால் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இந்த முடிவு எடுத்துள்ளாராம். மேலும் இப்படத்தை ரமேஷ் வர்மாவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த  மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages