Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனார் ஸ்ருதிஹாசன்


விஷால், பிரசன்னா மற்றும் வரலட்சுமியை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் பிரபல தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் சிங்கம் 3 படத்திற்க்கு பிறகு தமிழ் படங்களில் பெரிதாக கமிட் ஆகாமலே இருந்தார். தனது அப்பா இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் மட்டுமே நடித்து வந்தார். அரசியல் , பிக்பாஸ் 2, இந்தியன் 2 போன்ற பல காரணங்களாக சபாஷ் நாயுடு படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் கமல்.

இதனால் ஸ்ருதியின் கவனம் தற்போது சின்னதிரை பக்கம் திரும்பியுள்ளது. பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஹலோ சகோ என பெயரிப்பட்ட அந்நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்ருதியின் அப்பா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 சமீபத்தில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages