Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 20, 2018

Vennila Kabaddi Kuzhu 2 First Look Teaser


சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதை செல்வசேகரன் இயக்குகிறார். விக்ராந்த், சூரி, அர்தனா, சந்தோஷ், பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்திற்கு இசையமைத்த செல்வகணேஷ் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சுசீந்திரன் இந்த படத்தை இயக்கவில்லை என்றாலும் அவரின் மூலக்கதையை வைத்தே இப்படம் தயாராகிறது.

கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று டிவிட்டரில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vennila Kabaddi Kuzhu 2 First Look Teaser


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages