நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்க வெளிநாட்டில் கடுமையாக முயற்சி செய்துவருகிறார். பாகமதி படத்துக்கு பிறகு அனுஷ்காவுக்கு படவாய்ப்புகள் பெரிதாய் இல்லை அப்படியே படவாய்ப்புகள் வந்தாலும் அதில் கமிட் ஆகாமல் புறகணித்துவிடுகிறார்.
இதைப்பற்றி ஒரு பேட்டியில் அனுஷ்காவிடம் கேட்ட பொழுது நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவருகிறேன். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நான் எடையை கூட்டி நடித்தேன்.
கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. நான் என்னுடைய பழைய தோற்றத்துக்கு வந்த பிறகுதான் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பிப்பேன் அதுவரை நான் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்வதில்லை இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment