Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 29, 2018

இயக்குனர் முருகதாஸ்க்கு ஆதரவாக வரலட்சுமி கருத்து


தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் ரீலிஸ் ஆக சில நாட்களே இருக்கும் நிலையில் கதை குறித்த சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை.  உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையை முருகதாஸ் திருடி சர்கார் திரைப்படத்தை எடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு முருகதாஸ் மீது உள்ளது.

இந்த குற்றச்சாட்டை முருகதாஸ் மறுப்பதோடு அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

இந்த பிரச்சினை குறித்து முருகதாஸ்க்கு பல சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி இந்த சர்ச்சை குறித்து ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் நான் முருகதாஸ் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் உண்மை நிச்சயம் வெல்லும் என்றும் கூறியுள்ளார். அத்தோடு காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி சர்கார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages