Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 17, 2018

ஜெயம் ரவியின் அடங்க மறு நவம்பர் ரிலீஸ்


ஜெயம் ரவியின் நடத்துள்ள அடங்க மறு படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் அடங்க மறு. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இமைக்காமல் நொடிகள் புகழ் ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராஜ், முனிஸ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்திற்க்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அடங்க மறு டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா இன்று டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
ஜெயம் ரவியின் முந்தைய படமான டிக் டிக் டிக் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடங்க மறு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages