Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 17, 2018

வடசென்னை - விமர்சனம்


Cast: Dhanush, Ameer, Aiswarya Rajesh, Andrea Jeremiah, Samuthirakani, Daniel Balaji & Others

Cinematography: Velraj

Music: Santhosh Narayanan

Edited by: G.B. Venkatesh, R.Ramar

Written and Directed by: Vetrimaran

Produced by: Dhanush

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை கடந்து படம் நம்மை திருப்திப்படுத்தும். ஏனெனில் வித்தியாசமான கதைகளத்தை எடுத்து அதை ரசிகர்களுக்கு விருந்தாக்குவதில் இவர்கள் இருவரும் ஜாம்பவான்கள் என்று கூட சொல்லலாம். இவர்கள் இருவரும் தயாரித்த காக்காமுட்டை, விசாரணை போன்ற படங்கள் வாங்கிய விருதுகளே அதற்கு சாட்சி. இப்படிப்பட்ட  கூட்டணியில் உருவான வடசென்னை நம்மை திருப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.


விமர்சனம்

ஒரு வழக்கில் சிறைக்குள் வரும் தனுஷை சிறைக்குள் இருக்கும் பவனின் ஆட்கள் அடிக்கடி மிரட்டுகின்றனர். தன்னை காத்துக்கொள்ள நினைக்கும் தனுஷ் பவனின் எதிராளியான கிஷோர் கூட்டணியில் சேர முயற்சிக்கிறார். அதற்காக தனக்கு நன்கு தெரிந்த கேரம் விளையாட்டை வைத்து கிஷோரிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார். ஒரு நாள் நடக்கும் கேரம் போட்டியில் கிஷோரை  கொல்ல முயற்சி செய்கிறார் தனுஷ். தனுஷிடம் குத்து வாங்கிய கிஷோருக்கு என்ன ஆயிற்று எதற்காக அவர் கிஷோரை கொல்ல முயற்சிக்கிறார்  அவர்கள் இருவருக்கும் என்ன பகை என்பதே வடசென்னை சொல்லும் மீதி கதை .

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்துபவர் தனுஷ். இந்த படத்தில் அன்புவாகவே வாழ்ந்திருக்கிறார். கதைக்கு ஏற்றவாறு தன் உடலை ஏற்றி இறக்கி இருப்பது பிரமாதம். இந்த நேரத்தில் திரையரங்கில் தனுஷ் ரசிகர் அல்ல வெறியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது‌ . அன்புவாக நடித்திருக்கும் எங்கள் அன்பு தலைவனைக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். அதையே தான் நாமும் சொல்கிறோம் அன்புவாக நடித்திருக்கும் தனுஷிக்கு வாழ்த்துக்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற வடசென்னை கதாநாயகியின் நடிப்பை நாம் காக்கா முட்டையிலே பார்த்து வியர்ந்து இருக்கிறோம். ஆனால் இதில் பாவடை, தாவணி, புடவை என கலக்கியிருக்கிறார். என்ன படத்தில் அவர் பேசும் கெட்ட வார்த்தைகளை தான் காது குடுத்து கேட்க முடியவில்லை. ஆண்ட்ரியாவுக்கு தரமணி படத்திற்க்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படம் என்றால் வடசென்னை தான் கணவனை இழந்த கைம்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.சமுத்திரக்கனி, கிஷோர், பவன், டேனியல் பாலாஜி என ஒவ்வொருவரும் தன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


வடசென்னை பகுதியை சார்ந்த படம் என்பதால் சந்தோஷ் நாராயணின் பாடல்களிலும் பிண்ணனி இசையிலும் கானா வாசமும் கருவாட்டு வாசமும் மிகுதியாக வீசுகிறது. முக்கியமாக கோவிந்தம்மாவால பாடல் நம் பள்ளி பருவ கலாட்டா காதலை நினைவுக்கு கொண்டுவருகிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆல் வடசென்னை நமக்கு அழகாகா தெரிகிறது. முக்கியமாக சிறைச்சாலை எது செட் எது நிஜம் என நம்மால் யூகிக்க முடியவில்லை. அந்த வகையில் ஒளிப்பதிவாளரையும் கலை இயக்குனரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்..

இறுதியாக வடசென்னையை கதையிலும் இயக்கத்திலும் தாங்கி சென்ற வெற்றிமாறனுக்கு ஒரு பெரிய சலாம்.  வெற்றிமாறன் ஒரு சாதாரண கதை என்றாலும் சாக்கடை பகுதியை சார்ந்த கதை என்றாலும் சந்தனம் பூசாமலே மணக்க வைத்து விடுகிறார். அந்த வகையிலும் வட சென்னையின் முதல் பாகத்தில் அன்புவின் வளர்ச்சியை ரத்தம் தெறிக்க உணர்வுபூர்வமான சொல்லியிருக்கிறார்.

அடுத்த என்ன வெற்றிமாறன் சார் அன்புவின் வளர்சியை வடசென்னை முதல் பாகத்தில் பார்த்துவிட்டோம். அன்புவின் எழுச்சிக்காக நாங்களெல்லாம் வெயிட்டிங் ... சீக்கிரம் செகண்ட் பார்ட் எடுத்துறுங்க என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

Rating: 4/5

சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages