Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

இளையராஜா - யுவன் இணைந்து இசையமைக்கும் முதல் படம்


பியார் பிரேமா காதல் படத்திற்க்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் முதல் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது  தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படத்திற்க்கு பிறகு விஜய் சேதுபதியும் சீனு ராமசாமியும் இணையவுள்ள நான்காவது படமாகும்

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் பூஜை நேற்று இளையராஜா வீட்டில் எளிமையாக நடைப்பெற்றது.

இதில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் ராஜராஜன், விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages