Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 11, 2018

96 படத்தை பார்த்து பாராட்டிய பாகுபலி வில்லன்


புதுமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி,  த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந் மேனன் இசையமைத்திருந்தார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

96 படம் வெளியான நாள் முதல் படத்தை  பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு அழகான காதல் கதைக்கு உயிர் கொடுத்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் 96 படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாகுபலி படத்தின் வில்லன் ராணா டகுபதி  96 படத்தை பார்த்துவிட்டு ஒரு  ட்விட் செய்துள்ளார். அதில் "ஒரு காதல் கதையை சிறந்த நடிப்பாற்றல் உள்ளவர்களுடனும் சிறந்த கலையுணர்வுடனும் சொல்லப்பட்டுள்ளது" என பாராட்டியுள்ளார்.

நல்ல படங்களை ரசிகர்களும் சரி சினிமா பிரபலங்களும் சரி கொண்டாடுவார்கள் அதற்கு சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை, பரியேரும் பெரிமாள் போன்ற படங்களே உதாரணம். இந்த வரிசையில் 96 திரைப்படமும் இணைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages