Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 8, 2018

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ள "சர்வம் தாளமயம்"


மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை தந்த ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படம் சர்வம் தாளமயம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அப்ரணா பாலமுரளி நடிக்கிறார்.

மேலும் நெடுமுடி வேணு, வினித், குமரவேல், விஜய் டிவி புகழ் டிடி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மிருதங்க வித்துவானிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஜி.வி.பிரகாஷ். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால் கர்நாடக இசை சமூகத்தில் இருந்து நிராகரிக்கப்படுகிறார். சாதி, மத அரசியல் தாண்டி அவர் ஆசை வென்றாதா என்பதை சர்வம் தாளமயம் படத்தின் கதை.

இந்த படம் டோக்கியோவில் நடைபெரும் 31 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மேலும் ஜி.வி.பிரகாஷின் முந்தைய படங்கள் அவருக்கு கைகொடுக்காத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages