Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

சசிக்குமார் மற்றும் பாரதிராஜா இணையும் புதிய படம்


புதுமுக நடிகர் ரோஷனை வைத்து சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் அக்டோபர் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கவுள்ள அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கென்னடி கிளப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சசிக்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். ஆர்‌.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தாய்சரவணன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இன்று ட்விட்டரில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tittle Look


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages