Cast: Vijay Antony , Nivetha Pethuraj
Cinematography: Richard Nathan
Music: Vijay Antony
Director: Ganesha
Producer: Fatima Vijayantony
1.Naga Naga: Singer- Mahalingam, Lyrics- Arun Bharathi
முருகனின் துதியை வைத்து ஹீரோவின் எனர்ஜியை கூட்டுவது தான் நக நக நகன பாடல் . பாடல் ஆரம்பித்த இடத்தில் இருந்து முடியும் வரை வேகம் குறையாமல் ஒரே வேகத்தில் போகிறது. அருண் பாரதியின் வரிகளும் மகாலிங்கம் குரலும் நம்மை ஈர்க்கிறது. நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான முருகன் பாடல் கேட்ட ஃபீலிங். Our Pick
ஹீரோவின் புகழ் பாடும் பாடல் தான் திமிரு புடிச்சவன். முதல் பாடலின் நக நக டிகு டிகு வரிகளை இசையாய் கோர்த்து விஜய் ஆண்டனி இந்த பாடலுக்கான பிண்ணனி இசையை அமைத்துள்ளார். முதல் பாடலை நாம் கேட்ட உடனே நமக்கு திமிரு புடிச்சவன் டிராக்ஸ் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த பாடல் சுக்குநூறாக உடைத்து விட்டது என்று கூட சொல்லலாம்.
பாடல் டைட்டில் கேட்டவுடன் சோகத்தை அள்ளி இறைக்கும் பாடல் என்று நினைத்தோம். ஆனால் சோகம் பாடலில் இல்லை கேட்கும் நமக்கு தான் பாடல் வரிகளில் எதுகை மோனையை சரியாக சேர்த்த அருண் பாரதி வரிகளிலும் அழுத்தமும் அர்த்தமும் சேர்ந்திருந்தால் இந்த பாடல் மனதை வருடும் அளவுக்கு இருந்திருக்கும். அனுராக் குல்கர்னியின் குரலும் விஜய் ஆண்டனியின் இசையும் மட்டுமே நமக்கு ஆறுதல்.
விஜய் ஆண்டனியின் குரலில் பாடல் மெதுவாக ஆரம்பித்தாலும் பின்னர் படிப்படியாக வேகம் கூடியது. பிறகு யார் கண்பட்டது என்று தெரியவில்லை அதே வரிகள் சொதப்பல். விஜய் ஆண்டனி சார் நாங்கள் எங்களை மாற்றிக்கொள்கிறோம். தயவு செய்து நீங்களும் உங்கள் பாடல் ஆசிரியரை மாற்றுங்கள் என்பது பாடல் கேட்பவர்களின் மனக்குமுறல்.
விஜய் ஆண்டனியின் சக்ஸஸ் ஃபார்முலா வித்தியாசமான வார்த்தைகளை பாடலில் சேர்ப்பது. அதை இந்த பாடலில் ஆவது சேர்திருப்பார் என்று நினைத்தோம். ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். பத்மலதாவின் குரல் நமக்கு ஆறுதல் தந்தாலும் இசையும் சரி வரிகளும் சரி நம்மைவெகுவாக ஈர்காமல் போனது இந்த பாடல் பிடிக்காமல் போனதற்கு காரணம்.
Thimiru Pudichavan Jukebox
Thimiru Pudichavan Trailer
No comments:
Post a Comment