Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 12, 2018

பாலிவுட்க்கு போகும் ராட்சசன் !


முண்டாசுப்பட்டி படத்த இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்  ராட்சசன். இதில் விஷ்ணுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ராம்தாஸ், காளி வெங்கட், ராதாரவி, சூசன் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

முதலில் குறைவான காட்சிகளே திரையிடப்பட்ட ராட்சசனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை அடுத்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் ராட்சசன் படத்தை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியுள்ளார். இந்த தகவலை அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்தியில் ரீமேக் இல் நடிப்பவர்கள் குறித்த விவயங்களை விஷ்ணு விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு  வேளை விஷ்ணு விஷாலே ராட்சசன் ரீமேக் இல் நடித்தால் அது அவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages