Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 24, 2018

நாளை வெளியாகிறது விஸ்வாசம் செகண்ட் லுக் ! தல ரசிகர்கள் கொண்டாட்டம் !


தல அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் நாளை வெளியாகிறது.

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் விஸ்வாசம். இது அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். இப்படத்தை சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜீத் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து.


செகண்ட் லுக்கை உற்று நோக்கி அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா இன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


இந்த செய்தியை அறிந்த தல ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர். மேலும் ஒரு சிலர் நாளைதான் எங்களுக்கு ரியல் தீபாவளி என்று சொல்லி வருகின்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages