Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 25, 2018

புல்லட்டில் ஸ்டைலாக இருக்கும் தல ! வெளியானது விஸ்வாசம் செகண்ட் லுக்


தல அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

தல அஜித் குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் விஸ்வாசம். இது அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தல இரட்டை வேடத்தில் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்று செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில் தல புல்லட்டில் ஸ்டைலாக அமர்ந்து கொண்டு இரு கையையும் உயர்த்தி சிரிப்பது போன்றும் அவருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் ஓடிவருவது போன்றும் மிக கலர்புலான செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.


அத்துடன் சில நாட்களாக படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் பலருக்கு இருந்தது அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் படம் பொங்கல் 2019 என படக்குழு செகண்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages