Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 20, 2018

96 ரீமேக்கில் நடிக்கும் ஸ்டைலிஸ் ஸ்டார்


விஜய் சேதுபதி ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட் ஆனது 96 திரைப்படம். விஜய் சேதுபதிக்கு மட்டுமல்லாமல் த்ரிஷாவின் சினிமா பயணத்திலும் இது முக்கிய படமாகும். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்க்கு பிறகு த்ரிஷாவின் ஆழமான நடிப்பை 96 படத்தில் பார்க்க முடிந்தது.

இன்னமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஸ்டைலில் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் 96 திரைப்பட ரீமேக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages