Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 20, 2018

வந்தா ராஜாவாதான் வருவேன் டீசரை குறித்து படக்குழு அறிவிப்பு


செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு நடித்துவரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

அத்தாரிண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆன இந்தப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை இன்று வெளியாகியுள்ளது.

படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர் டப்பிங்  வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் டீசர் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை அறிந்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages