Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 16, 2018

காற்றின் மொழி - விமர்சனம்


Cast: Jyothika, Vidharth, Lakshmi Manchu, M.S.Bhaskar
Cinematography: Mahesh Muthuswami
Edited By: Praveen K.L
Music: A.H.Kaashif
Directed By: Radha Mohan
Produced By: G.Dhananjayan

வித்யாபாலன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான துமாரி சுலு என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் காற்றின் மொழி. பெரும்பாலான இந்தி ரீமேக் படங்கள் தமிழ் சினிமாவிற்க்கு வந்து சறுக்கலை சந்தித்துள்ளது. சாதனையும் படைத்துள்ளது. அந்த வகையில் காற்றின் மொழி சறுக்கியதா இல்லை சாதித்ததா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.



விமர்சனம்

பெரும்பாலான பெண்களின் உலகமே சமையல் அறைதான். அந்த காலம் மலையேறிவிட்டது என்று பலர் சொன்னாலும் நிதர்சனம் இது தான். அப்படி கணவன், மகன் மற்றும் சமையல் அறையே உலகம் என வாழ்ந்து வருகிறார் ஜோதிகா. இக்கால பெண்கள் போல வெளியே சென்று வேலை செய்ய ஆசைப்படும் ஜோதிகாவுக்கு ஹாலோ எப்.எம்.ல் ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைக்கிறது. அந்த வேலையில் ஜோதிகா சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அந்த வேலையினால் அவர் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளே காற்றின் மொழியின் மீதி கதை.


மொழிப்படத்தில் வாய் பேச முடியாத ஜோதிகாவை இதில் வாயாடி ஜோதிகாவாக பார்க்கலாம். நிறுத்தாமல் பேசும் ஜோதிகாவின் ஹஸ்கி வாய்ஸ் படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் நம் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மைனா படத்திற்க்கு பிறகு விதார்த் தன் சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளனர்.



அதே போல் படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், லட்சுமி மஞ்சு ஆகியோரின் நடிப்பு பிரமாதம். மயில் சாமி கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கை அதிர வைத்துவிடுகிறார்.

இப்படி எக்கசக்க நடிகர்கள் நடித்திருக்க  அது போதாதென்று சிம்பு சிறப்பு தோற்றத்தில் வந்து பஞ்ச் அடித்து செல்கிறார். ஜோதிகாவிடம் அவர் பேசும் டயலாக் படத்துடன் அவர் ரியல் லைஃப்பையும் கலந்து பேசுவது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அறிமுக இசையமைப்பாளர் ஏ.எச்.காஷிப்யின் பிண்ணனி இசை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் டார்ட்டி பொண்டாட்டி பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. காட்சிகளையும் கதாபாத்திரத்தையும் ஒளிப்பதிவின் மூலம் அழகுபடுத்தி காட்டியிருக்கிறார் மகேஷ் முத்துசாமி.

வீடு, ரேடியோ ஸ்டேஷன் என கதை மாறி மாறி நடப்பதால் ஒரு கட்டத்தில் நமக்கு சலிப்பு தட்டுகிறது. இருந்தாலும் கலகலப்பான காமெடியால் அந்த ஓட்டையை அடைத்து விடுகிறார் ராதாமோகன். மொழி, அபியும் நானும் போன்ற படங்கள் ராதாமோகனின் மாஸ்டர் பீஸ். அந்த படங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் காற்றின் மொழி ஓகே !

Rating: 3.5/5


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages