Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 23, 2018

சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லைகா

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அத்தாரின்டிகி தாரேதி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மகத், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் டீசர் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி நேற்று லைகா டீசர் புரோமோவை வெளியிட்டுள்ளது. மேலும் இம்மாதம் 29 ஆம் தேதி டீசர் வெளியாகும் என்ற தகவலையும் புரோமோவில் குறிப்பிட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.


Teaser Promo


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages