Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 23, 2018

பேட்ட ஆடியோ தேதி வெளியானது ! சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அனிருத் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்க்கு  இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் முதல் பாடல் டிசம்பர் 3 ஆம் தேதியும் இரண்டாம் பாடல் டிசம்பர்  7 ஆம் தேதி வெளியாகும் என்ற கூடுதல் தகவலையும் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages