Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 16, 2018

விஷால் படத்தில் இணைந்த சன்னி லியோன்


சண்டக்கோழி 2 வை தொடர்ந்து விஷால் நடிக்க உள்ள படம் அயோக்யா. இது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாலின் உதவியாளர் ஆவார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் புதிதாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகிவரும் சரித்திர படமான வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages