Breaking

Post Top Ad

Your Ad Spot

Dec 1, 2018

2.0 படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வியாழன் அன்று வெளியான 2.0 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தபடத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த 2.0 படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் 2.0 படத்தை பார்த்துவிட்டு  பாராட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் மற்றும் ஸ்டைல் ஆக நடித்துள்ளார். அக்ஷய்குமாரின் நடிப்பு பிரமாதம் என்று கூறியுள்ளார். மேலும் 2.0 திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்று  அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages