Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த அஜித்!


தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புற ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் முழுக்க அஜித் வேட்டி சட்டை அணிந்து தான் திரையில் தோன்றி இருப்பார். இதை பார்த்த முன்னணி வேட்டி நிறுவனம் அஜித்தை தங்கள் ப்ராண்ட் விளம்பரத்தில் நடிக்க அணுகியதாம்.

ஒரு கால்ஷீட்டுக்கு 1 கோடி கொடுத்தும் அஜித் அவ்விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அஜித் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு சில விளம்பரங்களில் மட்டுமே நடித்தார். அதுவும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் வந்தவுடன் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages