Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி!


அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக கிராமப்புற ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தின் தமிழக வசூல் 125 கோடியை கடந்துவிட்டதாக தமிழக விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அண்மையில் தெரிவித்திருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தல ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் விஸ்வாசம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்சன் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தெலுங்கிலும் விஸ்வாசம் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages