Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

அஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!


தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான விஸ்வாசம் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஸ்வாசம் வெளியான நாள் முதல் இன்றுவரை பல திரையரங்கங்களில் ஹவுஸ் புல்லாக ஓடி வருவதால் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார் என்பதும் இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹச்.வினோத் இயக்குகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இப்படம் மட்டுமின்றி அஜித் வேறு சில நிறுவனங்களின் படங்களிலும் நடிக்க இருக்கிறார் என வதந்திகள் பரவின. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அஜித் 2020 ன் மத்தியில் வரை போனி கபூர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அவர் வேறு நிறுவனங்களில் நடிக்கிறார் என்ற செய்தி உண்மையில்ல எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages