Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

தல 59 படத்திலிருந்து நஸ்ரியா விலகியதற்கான காரணம் இதுவா?



விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தில் முதலில் நடிகை நஸ்ரியா நடிக்க இருக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது. ஆனால் தீடிரென்று நஸ்ரியா இந்தப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் நஸ்ரியா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இது நஸ்ரியா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த படத்தில் இருந்து நஸ்ரியா எதற்காக வெளியேறினார் என்ற காரணம் தற்போது கசிந்துள்ளது. தல 59 திரைப்படம் பிங்க் படத்தில் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப்படத்தில் நஸ்ரியாவுக்கு சில ஆபாச காட்சிகள் இருக்குமாம். அதுமட்டுமின்றி கோர்ட்டில் நஸ்ரியாவிடம் நீங்கள் வெர்ஜினா என்று அஜித் கேட்பது போன்ற காட்சிகள் இருக்குமாம்.

இதற்கு முன் ஹோம்லி ரோலில் நடித்த நஸ்ரியா இது போன்ற காட்சிகளில் நடித்தால் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தல 59 படத்திலிருந்து விலகி விட்டாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages