Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 27, 2019

5 நாட்களில் சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்! கெத்து காட்டிய தல ரசிகர்கள்


தல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

ஏற்கனவே விஸ்வாசம் வசூலில் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் தல ரசிகர்கள் புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளனர்.


தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன் என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்பாடல் இதுவரை யூடியூப்பில் மட்டும்  3.64 லட்சம் லைக்ஸ்குளை பெற்றுள்ளது. 

இந்நிலையில் 5 நாட்களுக்கு முன்னர் விஸ்வாசம் படத்திலிருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடல் 3.67 லட்சம் லைக்ஸை பெற்று சிம்டாங்காரன் சாதனையை முறியடித்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages