Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 31, 2019

தல 60 கதை இப்படி தான் இருக்கும்! தயாரிப்பாளர் கூறிய சூப்பர் தகவல்


விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தல 59 என அழைக்கப்படுகிறது.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும், இது பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தல 59 படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் தல 60 படம் விஸ்வாசம் படத்தை போன்றே ஒரு மாஸ், கமர்ஷியல் படமாக இருக்குமாம்.


இந்த தகவலை போனி கபூரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்களுக்கு மற்றொரு கமர்ஷியல் ட்ரீட் காத்திருப்பது உறுதி.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages