Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 20, 2019

தளபதி 63யில் வில்லன் இவரா?


விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகவுள்ள தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதை முன்னிட்டு நடித்தப்பட்ட சிறப்பு பூஜையில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக விஜய், அட்லி, ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர்கள், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேனியல் பாலாஜி இப்பூஜையில் கலந்துக் கொண்டதால் அவர் தளபதி 63 படத்தில் வில்லானாக நடிக்க இருக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே வேட்டையாடு விளையாட்டு, பொல்லாதவன் ஆகிய படங்களில் டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டி இருந்தார். அது மட்டுமின்றி விஜயின் பைரவா படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages