அஜித்தின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வாசம் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே நேரத்தில் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் நான் ஆசை படத்தை பார்த்துவிட்டு அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் 10 வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் ஆன புதிதில் என் மனைவியுடன் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றிருந்தேன். அப்போது அஜித் சார் ஷாலினி மேடம் உடன் அங்கு வந்திருந்தார். திடிரென என் முன் வந்து, கைகொடுத்து சாரி உங்களுக்கு கல்யாணம் ஆனதா கேள்விப்பட்டேன். கல்யாணத்திற்கு என்னால் வர முடியவில்லை. நீங்கள் எப்படி இருக்கீங்க? உங்கள் மனைவி எப்படி இருக்காங்க? என கேட்டார். இதை எல்லாத்தையும் விட முக்கியமாக, வந்து பேசுவதற்கு முன், hello I am அஜித் குமார் என சொன்னார். அது தான் அவர்.
அஜித் சாருக்கு ஹேட்டர்ஸீம் இருக்காங்க ஆனால் அவரை பற்றி பர்ஸனலாக தெரிந்துவிட்டோம் என்றால் அவருடைய ஹேட்டர்ஸ் கூட ரசிகராக மாறிவிடுவார்கள் என அப்பேட்டியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment