விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான சீதக்காதி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இருந்தபோதிலும் விஜய் சேதுபதி ரசிகர்களை அப்படம் கவர்ந்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.
சிந்துபாத் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிந்துபாத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 😍#Sindhubaadh first look poster 😍@thisisysr @yoursanjali @Rajarajan7215 @VANSANMOVIES @irfanmalik83 @mounamravi @CtcMediaboy pic.twitter.com/tFHvt5qdwE— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2019
No comments:
Post a Comment