வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.
விஸ்வாசம் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்கள் பேனர், கட்-அவுட் வைக்கும் பணிகளில் பிஸியாக உள்ளனர்.
அதுவும் வத்தலக்குண்டு பகுதியில் விஸ்வாசத்தின் பிரமாண்டத்தை காட்ட 3 லட்சம் செலவில் 185 அடி உயர கட்-அவுட்டை தல ரசிகர்கள் வைக்கவுள்ளார்களாம். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment