Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

போரடித்துவிட்டது, இனி இப்படி கேட்காதீர்கள்: சலித்துக்கொண்டு கூறிய பிரியா வாரியர்


"மாணிக்க மலராய பூவி" என்ற ஒரே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இளம் நடிகை பிரியா வாரியர். இவர் நடித்த முதல் மலையாள படமான "ஒரு அடார் லவ்" திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டு வரும் ப்ரியா வாரியரை எங்கு சென்றாலும் கண்ணடித்து காட்டும் படி கேட்கிறார்களாம்.

அது தனக்கு போரடித்து விட்டது என்று கூறும் பிரியா வாரியர். "இதுவரை 200 முறைக்கு மேல் செய்துவிட்டேன். வெறும் புருவ அழகி என்கிற பட்டத்தோடு இருக்க விரும்பவில்லை. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஆசையாக உள்ளது" என கூறியுள்ளார்.

ஒரு அடார் லவ் படம் மட்டுமின்றி ஸ்ரீ தேவி பங்களா என்ற இந்தி படத்திலும், இன்னும் சில படங்களிலும் பிரியா வாரியர் நடித்துவருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages